மகிந்தவின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் தனியார்துறை ஊழியர்கள்!

50shares

தமது ஆட்சியில் அரசாங்கத்துறையினருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் அதேவேளை தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபஷ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில்நடைபெற்ற விசேட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெற்றிலை விற்கும் நபர் முதல் அனைத்து மக்களதும் பொருளாதாரத்தை தரமுயர்த்தும் வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வேட்பாளர் கோட்டாபய வழங்கியுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுவது உறுதியாகும்

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோட்டத் தொழிலாளிகளுக்கு 1,500 ரூபா நாட்கூலி பெற்றுத் தருவதாக மேடையில் கூறியுள்ளபோதும் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 1,000 ரூபாவே தரப்படுமென அச்சிடப்பட்டுள்ளது. இது ஏமாற்று வேலை. இக்காலத்து மக்கள் இவ்வாறான பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாறமாட்டார்களென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி