யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி!

554shares

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாளை மறுதினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர்நாயகம் எச்.எம். சி. நிமலசிறி தெரிவித்தார்.

இதன்படி சென்னையிலிருந்து முதலாவது விமானம் நாளை மறுதினம் நண்பகல் 12 மணியளவில் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்.

முதல் கட்டமாக வாரத்திற்கு மூன்று சேவைகள் நடைபெறும். அதன்படி திங்கள் , புதன் , வெள்ளி ஆகிய தினங்களில் இந்த சேவை நடத்தப்படும்.

படிப்படியாக நாளாந்த சேவையினை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க