சஜித்துக்காக யாழ்ப்பாணத்தில்இளைஞர்கள் என்ன எல்லாம் செய்தார்கள் என்று தெரியமா?

526shares

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்திருந்தோம் என சஜித் பிரேமதாச இளைஞர் அணியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் தலைவருமான திலீப்குமார் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாவின் மாவட்ட இளைஞரணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்திருந்தோம். குறிப்பாக 21 கோவில்களில் பூஜை வழிபாடு மற்றும் ஆகம வழிபாடு போன்றவற்றில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம்.

தற்போது ஜனாதிபதி தேர்தலில் பிரதான கட்சிகள் இன்று வரையில் பிரேமதாஸ அவர்களும் ஒருவர் அவர் இந்த முறை வெற்றி பெறுவது உறுதி.

17ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச அறிவிக்கப்படுவார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வந்து இருந்த சஜித் பிரேமதாச யாழ் மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை தான் மூன்று மாதத்தில் ஏற்படுத்தி தருவதாக உறுதிமொழி வழங்கி இருந்தார்

அதேபோல் வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகளை கைதிகளின் விடுதலை போன்றவற்றிற்கும் தான் பல்வேறு வகையில் உதவி செய்ய இருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்

குறிப்பாக பல்கலைக்கழகத்தை முடித்துவிட்டு பட்டம் பெற்றிருக்கும் பட்டதாரிகளுக்கும் மூன்று மாதத்திற்குள் தான் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த கால ஆட்சியின் போது பல்வேறு பகுதிகளை வழங்கியிருந்த இந்த அரசாங்கம் ஆனால் எதுவும் நிறைவேற்றவில்லை குறிப்பாக வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகளை ஞர்கள் தொழில் வாய்ப்பின்மை சுயதொழில் முயற்சியினை இன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் மாவட்டத்தில் காணப்படுகின்றன அதற்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

அதற்காகவே நாங்கள் ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றோம்

அவருக்காக பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இந்த நாட்டிலே நாங்கள் மீண்டும் கொள்ளையர்களிடம் ஒப்படைக்க முடியாது அவர்களினால் இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்டதே தவிர அவர்களுக்கு உரிய உரிய முறையான தீர்வு திட்டம் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

ஒரு நாட்டினுடைய ஒரு உன்னதமான தலைவர் அவர் லஞ்சம் ஊழல் அற்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் சஜித் இருந்தார்.

அவராலேயே யாழ் மாவட்டத்தில் பல்வேறு வீடுகள் அமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டன மக்களின் தலைவனாகவும் வாழ்கின்றனர். என்று தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி