மக்களை அச்சமூட்டும் கருணா, பிள்ளையான்! கோட்டாபய வந்து விட்டால்...!

73shares

இந்த தேர்தல் பிள்ளையானுக்கும், மற்றவர்களுக்கும் நன்றி செலுத்தும் தேர்தலல்ல. இந்த நாட்டை குட்டிச் சோறாக்குவதா? இல்லை. நாம் நிம்மதியாக வாழ்வதா? என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் கல்குடாத் தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்-

அரசியலில் ஓங்கி கொலிக்க வேண்டும் என்பதற்காக, எமது பரம்பரை நாட்டை ஆள வேண்டும், ஜனநாயகம் தொலைக்கப்பட வேண்டும் என்பதற்காக சதி செய்கின்றார்கள். இந்த சதியை சிறுபான்மை சமூகம் ஏமாந்து விடக் கூடாது.

இன்று பிள்ளையான், கருணா, முஸ்லிம்களின் சில முகவர்கள் மக்கள் மத்தியில் பொய் கூறுகின்றார்கள். சில இடங்களில் அச்சம் ஊட்டுகின்றனர்.

நீங்கள் வாக்களிக்கா விட்டால் நாளை வாழ முடியாது என்று பயமுறுத்துகின்றனர்.

ஒரு சில பகுதிகளில் ஆசை வார்த்தைகளை ஊட்டுகின்றர்கள். நடைமுறையில் நடைபெறாத, கற்பனை செய்து பார்க்க முடியாத விடயங்களை சொல்கின்றார்கள்.

இதில் ஏமாந்து விடாதீர்கள். இந்த தேர்தல் பிள்ளையானுக்கும், மற்றவர்களுக்கும் நன்றி செலுத்தும் தேர்தல் அல்ல.

நல்லாட்சிக்கான தேசிய முன்னனி சொல்கின்றது என்று மூன்றாம் தரப்புக்கு அழிக்கின்ற வாக்குகள் அல்ல.

இந்த நாட்டில் எல்லா மக்களுக்கும் தலைமை தாங்குகின்ற தேர்தல் ஜனாதிபதி தேர்தல். இந்த நாட்டை குட்டிச் சோறாக்குவதா இல்லை இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதா என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல்.

சிறுபான்மை சமூகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும், நாளை அடிமையாகி விடக் கூடாது. எமது பிள்ளைகள் அடிமைப்படக் கூடாது. பிள்ளைகளின் எதிர்காலம் சீரழிந்து விடக்கூடாது. இது ஜனநாயக தேர்தல்.

ஒருவேளை கோட்டாபய வந்து விட்டால் இனி இந்த நாட்டில் ஜனநாயக தேர்தலை காண முடியாது. அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, அச்சுறுத்தி, கட்சிகளை பிளவுபடுத்தி, கட்சி தலைமைகளை பயமுறுத்தி, அரசியல் செய்ய மோசமான முறையில் நடவடிக்கை எடுக்கின்ற நாசகார கூட்டம் தான் ஒன்றுபட்டு இந்த தேர்தலில் சஜித்தினை தோற்கடிக்க சிங்கள பக்கம் ஒரு பிரச்சாரம், தமிழ் பக்கம் ஒரு பிரச்சாரம், முஸ்லிம் பகுதியில் ஒரு பிரச்சாரம் செய்கின்றனர்.

இவ்வாறான நாசகார சக்திகளை தோற்கடிப்பதற்கு சிறுபான்மை சமூகம் ஒன்றுபட்டு அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசாவினை அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்றச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!