சஜித் பிரேமதாசவை வெல்லவைப்பதற்காக மக்களை வாக்களிக்கச் செய்வதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா தெரிவித்தார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்
நாங்கள் எதைச் செய்தாலும் நிதானத்துடன் தான் செய்வோம்.மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாங்கள். சிந்தித்துதான் முடிவுகள் எடுத்துள்ளோம் மற்றவர்கள்போல் நாம் செயற்பட முடியாது.
பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த முடிவுகளுக்கு கூட நாங்கள் நிதானமாகவே செயற்பட்டோம் நாங்கள் முடிவுகளையோ அறிக்கைகளையோ விட்டுவிட்டு மாணவர்களின் சந்திப்புகளுக்கு வரவில்லை வாக்கு உரிமையை கருத்தில் எடுத்து நாம் ஒன்று கூடினோம் தீர்மானங்கள் எடுத்தோம். அதனை வைத்து முன்னகர்த்தினோம் பேச்சுவார்த்தைகள் நடாத்தினோம்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதுவும் கூறவில்லை என்றார்கள் தற்போது புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளித்து விட்டு அவர்களின் மேடைகளில் ஏறவில்லையென கூறுகிறார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்பதைப்பார்த்து சிலரும் தமக்கு சாதகமாக விடயங்களை செய்வதற்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் நாங்கள் மேடைகளில் ஏறித்தான் ஆதரவு திரட்டவேண்டும் என்றில்லை நாங்கள் எமது நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் எமது ஆதரவாளர்களுடன் இணைந்து செயலாற்றத் தொடங்கி விட்டோம்.
கலந்துரையாடல்களை செய்து கொண்டிருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.