கிளிநொச்சியில் பரிதாபமாக பலியான 3 வயது பாலகன்! ஒரே ஒரு மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்!

634shares

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பாம்பு கடிக்கு இலக்காகி 3 வயது பாலகன் ஒருவன் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு குறித்த சிறுவன் படுக்கை அறைக்கு சென்று க ட்டிலில் உறங்கி சிறிது நேரத்துக்குப் பின்னர், வீட்டுக்குள் இருந்து வெளியேறிய கண்டங்கருவளை இனத்தைச்சேர்ந்த பாம்பு ஒன்றை சிறுவனின் தந்தை அடித்துக் கொன்றுள்ளார்.

அதன் பின்னர் அதிகாலையில் மகனை எழுப்பியபோது, மகன் நினைவற்று இருந்ததை அவதானித்த பெற்றோர், உடனடியாகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனின் உடலை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுவன் இறந்ததை உறுதி செய்துள்ளனர்.

பின்னர் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுவன் பாம்பு தீ ண்டி இறந்துள்ளமையினை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த மூன்று வயதுச் சிறுவன் பெற்றோருக்கு ஒரே ஒரே மகன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சிறுவனின் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத் தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Like This

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!