பிள்ளை பாக்கியம் இல்லையா...? இனிமேல் கவலை வேண்டாம் - தேர்தல் பிரசார கூட்டத்தில் மஹிந்த!

275shares

சிலாபத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், பிள்ளைப் பாக்கியமற்றவர்களுக்காக அரச வைத்தியசாலைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...

பிள்ளைப் பாக்கியமின்றி அவதியுறும் குடும்பங்களின் நலனைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு அதி நவீன முறைகளில் சிகிச்சை அளிக்கும் நோக்கில் விசேட மருத்துவ வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இயற்கையாகவும், பல்வேறு இயற்கை காரணிகளினாலும் பிள்ளைப்பாக்கியமற்ற தம்பதியினரின் எண்ணிக்கை துரித கதியில் அதிகரித்துள்ளது.

பணம் படைத்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று நவீன மருத்துவ சிகிச்சை முறைமைகளின் மூலம் பிள்ளை பேறு பெற்றுக்கொள்கின்றனர். எனினும் வறுமையில் வாடுவோர் பிள்ளை பாக்கியமின்றி பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலம் பிள்ளை பாக்கியத்தை பெற்றுக் கொள்வதற்கு முடியும் என்ற போதிலும் வறுமை நிலைமையினால் அந்த கனவை நனவாக்கிக் கொள்ள முடியாதவர்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அரச வைத்தியசாலையில் மகப்பேறு தொடர்பில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Like This
இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்