கணவன் மனைவிக்கிடையில் முற்றிய தகராறு; மகனைக் காப்பற்றும் முயற்சியால் ஏற்பட்ட விபரீதம்!

249shares

வாழைச்சேனை கண்ணகிபுரம் பகுதியில் தனது கணவனை தாக்கி பெண் ஒருவர் கொலைச் செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் போது தனது மகனை கூரிய ஆயுதமொன்றில் தாக்க கணவன் முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த குறித்த பெண் மகனை காப்பாற்றும் முயற்சியில் கணவனை தடியொன்றினால் தாக்கியுள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த கணவன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதன் போது 36 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், 16 வயதான மகன் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலை நடத்திய சந்தேகநபரான குறித்த பெண்ணை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர் இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி