உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிக்குவை நள்ளிரவு சந்தித்த சஜித்! தேரர் எடுத்த முடிவு!

346shares

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் ஸ்ரீலங்காக் குடியுரிமை ஆவணங்களை சமர்பித்து நிரூபித்துக்காட்டுமாறு கோரி பௌத்த பிக்கு ஒருவரால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

கடந்த 10ஆம் திகதி முதல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்று நள்ளரவில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வேண்டுகோளின் பின்னர் போராட்டத்தைக் கைவிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமை விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கோட்டாபய ராஜபக்ச தரப்பினர் பலவிதமான ஆவணங்களை ஊடகங்களுக்கு முன்பாக காண்பித்த போதிலும் அவை போலியானவையே என்று அம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமை நீக்கம் மற்றும் ஸ்ரீலங்கா குடியுரிமை பெற்றுக் கொள்ளப்பட்டமை தொடர்பிலான உண்மையான ஆவணங்களை 03 தினங்களிற்குள் வெளியிடும்படி வலியுறுத்தி கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பித்தார்.

இடைக்கிடையே பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கின்ற பௌத்த பிக்குமார்களும் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடக்கோரி கோரிக்கை முன்வைத்திருந்த போதிலும் தனது போராட்டத்தை இங்குருவத்தே சுமங்கல தேரர் கைவிடவில்லை.

இந்த நிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நேற்று நள்ளிரவில் சுதந்திர சதுக்கத்திற்கு விஜயம் செய்தார். குறித்த பிக்குவுடன் சந்திப்பை நடத்திய அவர், பின்னர் போராட்டத்தைக் கைவிடும்படி கோரிக்கை முன்வைத்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இங்குருவத்தே சுமங்கல தேரர், தனது உணவுதவிர்ப்புப் போராட்டத்தை 04 நாட்களின் பின்னர் கைவிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்