யாழில் இருந்து கொழும்பு சென்ற பஸ் மீது கல்வீச்சு! இராணுவ சிப்பாய் உட்பட மூவர் காயம்

  • Dias
  • November 14, 2019
344shares

நேற்று புதன்கிழமை இரவு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி வந்த பஸ் மீது அடையாளம் தெரியாத நபர்களால் நடத்திய கல்வீச்சில் பஸ்சில் பயணித்த இராணுவச் சிப்பாய் உட்பட மூவர் காயமடைந்தனர்.

பங்கதெனிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த லுனு ஓயா என்ற இடத்தில் முச்சக்கர வண்டியில் வந்த நபர்களாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது யாழில் இருந்து கொழும்பு நோக்கி வந்த அரச பஸ் ஒன்று மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இவர்கள் சிறுகாயங்களுக்குள்ளான நிலையிலே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதாகவும் , பஸ்சின் முன்பகுதி கண்ணாடிக்கே சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுந்தூர குறுகிய தூர தனியார் பஸ் சாரதிகளுக்கிடையிலாள பகைமையே இக்கல்வீச்சுக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க