வெளிநாட்டு விமானங்களில் பயணிப்போருக்கு அதிர்ச்சி செய்தி

1612shares

வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்களில் அறவிடப்படும் கட்டணங்கள் 57 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

38 வருடங்களுக்கு பிறகு விமான பயண மற்றும் சேவைக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட புதிய கட்டணங்களின் படி நாளாந்த கொடுப்பனவுகள் 6 மில்லியன் ரூபா வரையில் அதிகரிக்கப்படலாம் எனவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் நாளாந்தம் 125 விமானங்கள் பறப்பதாகவும், இதனூடாக தினசரி 3.9 மில்லியன் வருவாய் கிடைப்பதாகவும் புதிய கட்டண அதிகரிப்பால் நாளாந்தம் 6.1 மில்லியன் வருவாய் கிடைக்கவுள்ளதாகவும் இது வருடத்துக்கு 2225.6 மில்லியனாக இருக்குமெனவும் குறித்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த கட்டண அதிகரிப்பானது வெளிநாட்டில் கல்விபயில செல்லும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை பெரிதும் பாதிக்கும் எனவும் இந்த அதிகரிப்பினால் விமான நிறுவனங்கள் சடுதியாக தமது கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளும் என்பதால் பணவீக்கம் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசுக்கு வருமானம் அதிகரித்தாலும் விமானங்களில் பயணிப்பவர்களுக்கு இந்த செய்தியானது வயிற்றில் புளியை கரைக்கும் என்பதில் சந்கேமில்லை.

அதிகரிக்கப்பட்ட கட்டண விபரங்கள் வருமாறு

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்