வன்னி தேர்தல் தொகுதியின் வவுனியா மாவட்ட முடிவுகள் வெளியானது!

319shares

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நேற்று (16) மாலை சுமார் 5:15 மணியளவில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

இந்த முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

நாடு முழுவதும் 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

"எந்த வன்முறையும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்ததில் மகிழ்ச்சி. இப்படி முடிந்த முதல் ஜனாதிபதி தேர்தல் இதுதான்" என்று தேர்தல் ஆணையத் தலைவர் கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகியுள்ளது. மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இப்போது தேர்வு செய்யப்படும் ஜனாதிபதி, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.

இந்நிலையில் முதற்கட்டமாக தற்போது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோக பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் தற்போது வெளியான தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

வன்னி தேர்தல் மாவட்ட தபால் முடிவு;

சஜித்பிரேமதாஸ: 8402

கோத்தாபாய: 1703

அனுரகுமார திஸாநாயக்க: 147

சிவாஜிலிங்கம் - 144

இரண்டாம் இணைப்பு..

வன்னி தேர்தல் மாவட்ட மன்னார் தேர்தல் தொகுதி ( மன்னார் மாவட்டம் ) -யின் வாக்களிப்பு முடிவுகள் வெளியானது!...

சஜித் பிரேமதாஸ - 53602

கோத்தாபய ராஜபக்ச - 6435

அனுர குமாரதிஸாநாயக்க - 3228

மூன்றாம் இணைப்பு..

வன்னி தேர்தல் மாவட்ட முல்லைத்தீவு தொகுதியின் ( முல்லைத்தீவு மாவட்டம் ) வாக்களிப்பு முடிவுகள் வெளியானது!

சஜித் பிரேமதாஸ - 47594

கோத்தாபய ராஜபக்ச - 4252

அனுர குமாரதிஸாநாயக்க - 902

சிவாஜிலிங்கம் - 251

வன்னி தேர்தல் தொகுதியின் வவுனியா மாவட்ட முடிவுகள்

சஜித் பிரேமதாச65,141

கோத்தபாய -13,715

அநுரகுமார திஸநாயக்க 667

இதையும் தவறாமல் படிங்க