உத்தியோகபூர்வமாக வெளியாகிய திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

659shares

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நேற்று (16) மாலை சுமார் 5:15 மணியளவில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

இந்த முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

நாடு முழுவதும் 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

"எந்த வன்முறையும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்ததில் மகிழ்ச்சி. இப்படி முடிந்த முதல் ஜனாதிபதி தேர்தல் இதுதான்" என்று தேர்தல் ஆணையத் தலைவர் கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகியுள்ளது. மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இப்போது தேர்வு செய்யப்படும் ஜனாதிபதி, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.

இந்நிலையில் முதற்கட்டமாக தற்போது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோக பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் தற்போது வெளியான தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்!

அதற்கமைய...

சஜித் பிரேமதாஸ - 7871

கோத்தாபய ராஜபக்ச- 5089

அனுர குமாரதிஸாநாயக்க - 610

ஹிஸ்புல்லா - 74

இரண்டாம் இணைப்பு

திருகோணமலை மாவட்ட மூதூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

சஜித் பிரேமதாச 74171

கோட்டாபய ராஜபக்ஷ 4925

மூன்றாம் இணைப்பு

திருகோணமலை மாவட்ட சேருவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ஷ - 31,303

சஜித் பிரேமதாச - 28,205

திருகோணமலை மாவட்ட திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

சஜித் பிரேமதாச - 56,594

கோட்டாபய ராஜபக்ஸ - 12,816

அநுரகுமார திஸாநாயக்க - 713

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!