தமிழ் மக்கள் தமது கொள்கையில் உறுதியாக உள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் தேர்தல் முடிவுகள்!

55shares

தமிழ் மக்கள் தமது கொள்கையில் உறுதியாக உள்ளனர் என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் ஆணையின் பிரகாரமே நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். என்றாலும், இனவிடுதலை தொடர்பில் தமிழ் மக்கள் உறுதியாகவுள்ளனர். அதனையே தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன.

ஸ்திரமான அரசியல் சூழல் மற்றும் அவரது கொள்கைகள் தொடர்பில் தெளிவான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டதும் நாம் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே உள்ளோம் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி