யார் இந்த கோத்தாபய?

110shares

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச இன்றையதினம் பதவியேற்கவுள்ள நிலையில் அவரின் பின்புலம் என்ன என்பதை விபரிக்கிறது ஐபிசி தமிழின் இந்த காணொலி

கோத்தாபய ராஜ­ப­க்ஷ டி.ஏ.ராஜ­ப­க்ஷ மற்றும் டந்­தினா ராஜ­ப­க்ஷ ஆகி­யோரின் மக­னாக 1949ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி வீர­கெட்­டி­யவில் பிறந்தார்.

தனது பாட­சாலைக் கல்­வியை ஆனந்தா கல்­லூ­ரியில் பெற்­றுக்­கொண்ட கோத்த­பாய ராஜ­ப­க்ஷ கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் தகவல் தொழில்­நுட்­பத்தில் பட்­டப்­ப­டிப்பை நிறை­வு­செய்தார்.

அனோமா ராஜ­ப­க்ஷவை திரு­மணம் செய்து கொண்­ட­துடன், அவர்­க­ளுக்கு மனோஜ் என்ற மக­னொ­ருவர் உள்ளார்.

இலங்கை இரா­ணு­வத்தில் கடட் அதி­கா­ரி­யாக 1971ஆம் ஆண்டில் இணைந்­து­கொண்ட கோத்தாபய ராஜ­ப­க்ஷ, லெப்­டினன் கேணல் தரம் வரை உயர்த்­தப்­பட்டு 20 வரு­ட­காலம் இரா­ணு­வத்தில் பணி­யாற்­றினார்.

1992 ஆம் ஆண்டில் இரா­ணு­வத்­தி­லி­ருந்து ஓய்­வு­பெற்று அமெ­ரிக்­கா­வுக்குச் சென்று அவ­ரது குடும்­பத்­தி­ன­ருடன் வசித்­து­வந்தார்.

பின்னர் 2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்தில் பாது­காப்புச் செய­லா­ள­ராகப் பொறுப்­பேற்­றுக்­கொண்டு 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி வரை அப்­ப­த­வியை வகித்தார்.

இந்­நி­லையில் இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் ஏழா­வது நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்­கான எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் சார்பில் கோத்­த­பாய ராஜப­க்ஷ வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்கப்­பட்டார்.

அவர் நேற்று முன்தினம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி, இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இன்று திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி