இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதிவியேற்றார் கோத்தாபய ராஜபக்ச.
இன்றையதினம் அநுராதபுரம் ருவான்வெலிசய விகாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களை அடுத்து அவர் முறைப்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றார்.
பதவியேற்றநிலையில் அவர் தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிவருகின்றார்.
இந் நிகழ்வில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.