ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவியேற்றவுடன் கோட்டாபய விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

1613shares

நாட்டில் அமைந்துள்ள எந்த ஒரு தனியார் மற்றும் அரச அலுவலகங்களிலும் அரச தலைவர்களின் படங்களோ அல்லது பிரதமரின் படங்களோ காட்சிப்படுத்தக் கூடாது என இன்றைய தினம் புதிய ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் மேற்கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ உத்தவிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு தற்சமயம் அனுராதபுரத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அரச அலுவலகங்களில் அரச தேசிய சின்னம் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எந்தவொரு அரச அலுவலகங்களிலும் எனது படமோ, பிரதமரின் படமோ அல்லது அமைச்சர்களின் படமோ காட்சிப்படுத்த வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க