ஜனாதிபதி கோட்டாபய தொடர்பில் ஆனந்த சங்கரி வெளியிட்டுள்ள நம்பிக்கை!

90shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி வகிக்கின்ற காலத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வை வழங்குவார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஆனந்தசங்கரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்திலேயே ஆனந்த சங்கரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு தனது மனம்நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஆனந்த சங்கரி தனது வாழ்த்து மடலில் கூறியுள்ளார்.

ஒரு சிலர், தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரு கொடியின்கீழ் இணைத்துக்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கையூடாக வகுப்புவாதப் பாதையில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனாலேயே கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ளாமைக்கு மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமில்லை என கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மற்றும் பொதுத்தேர்தல்கள் மட்டுமன்றி சகல விடயங்களிலும் இனவாதம் தலைதூக்கிய போதெல்லாம் தான் வெறுப்படைந்திருந்தமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிந்த விடயமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உள்ளிட்ட ஐந்து தமிழ் கட்சிகளும் திடீரென கூட்டு சேர்ந்துள்ளதன் பின்னணியில் அரசியல் சதித்திட்டமொன்று காணப்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அக்குழுவில் இருந்தவர்கள் தன்னை தொடர்பு கொண்டு இணையுமாறு கோரிக்கை விடுத்திருந்தால் நிச்சயமாக தான் அவர்களுடன் இணைந்திருக்க மாட்டேன் எனவும் அவர்கள் முன்வைத்த 13 கோரிக்கைகளில் முதலாவதே சர்ச்சைக்குரிய இனப்பிரச்சனை பற்றியதாகும் எனவும் ஆனந்த சங்கரி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சனைத் தீர்வுக்கு தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிந்தால் தனது பதவி காலத்திலேயே அதனை நிறைவேற்றுவார் என திடமாக நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!