ஈழத்தமிழர்களுக்காக வாதாடி வந்த வழக்கறிஞருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

726shares

இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பாக ராணுவத்தினர் விசாரிக்கப்படுகிற வழக்குகளில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக ஆஜராகிவந்த வழக்கறிஞர் குருபரனுக்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை மீட்டுத்தர வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தொடுத்திருந்தனர்.

அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களின் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் தரப்புக்காக வாதாடிவருபவர் வழக்கறிஞர், கலாநிதி குமாரவடிவேல் குருபரன்.

இவர் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக நீதிமன்றத்தின் மூலம் பொதுநல வழக்குகளை தொடர்ந்து வாதாடி வருகிறார்.

மேலும் குருபரன் யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சட்டத்துறைத் தலைவராகவும் இருந்துவருகிறார்.

இவர் ஆஜராகி வருகிற வழக்குகளின் விசாரணை தற்போதும் நடைபெற்று வருகிறது.

தற்போது குருபரன் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாட இலங்கை பல்கலைக்கழக மானியக்குழு தடைவிதித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவை எதிர்த்து குருபரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்திருப்பதாக தெரியவருகின்றது.

மேலும் “ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் போர்க்குற்றத்திற்காக இலங்கையில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவது அரிதிலும் அரிது.

அத்தகைய சொற்ப வழக்குகளில் இதுவும் ஒன்று. இலங்கை நீதியமைப்புக்கு உட்பட்டே ராணுவத்தை விசாரணைக் கூண்டில் குருபரன் ஏற்றியது,
அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காகத்தான் தற்போது குறிவைக்கப்படுகிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி