வவுனியாவில் தாக்குதல்! ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளளர் வைத்தியசாலையில் அனுமதி!

57shares

ஐக்கிய தேசியக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாசவை பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்கியதாக தெரிவித்து வவுனியா பொது வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை பொதுஜன பெரமுனவினர் நெடுங்குளம் பகுதியில் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளரது வீட்டிற்கு முன்பாக வெடிகளை கொழுத்தியுள்ளனர்.

இதன்போது அமைப்பாளர் அப்பகுதியில் வெடி கொழுத்தாதீர்கள் என தெரிவித்தபோதே பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் கருணாதாச வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!