ஜனாதிபதி தேர்தலில் இதற்காகவே தமிழ் மக்கள் ஒருமித்த குரலில் வாக்களித்தனர்!

41shares

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்தது என்பது கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வலியின் வெளிக்காட்டாகவும், தங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும், அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே வாக்களிப்பின் ஊடாக தங்களது நிலைப்பாட்டை வெளிக்காட்டி உள்ளனர்.

இதை புரிந்து கொண்டு மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தமிழ் மக்களின் வேதனையை புரிந்து கொள்ளுமாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்ணளவாக 398,000 வாக்குகளில் தமிழ் வாக்காளர்கள் 74 வீதம், 295,000, முஸ்லிம் வாக்காளர்கள் 24 வீதம் 95,000, சிங்கள வாக்காளர்கள் 2 வீதம் 8000 வாக்குகள் உள்ளன.

மாவட்டத்திலுள்ள மொத்த வாக்குகள் 398,000. இவ் வாக்குகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் 3032221 இதில் செல்லுபடியற்ற வாக்குகள் 4258 ஆகும்.

குறிப்பாக, சஜித் பிறேமதாஸ -அன்னம் சின்னத்திற்கு 238649 வாக்குகளும், கோத்தாபாயராஜபக் - மொட்டுச் சின்னத்திற்கு 38460 வாக்குகளும், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - ஒட்டகச் சின்னத்திற்கு - 13228 வாக்குகளும், ஆரியவம்ச திசாநாயக்க - கழுகு சின்னத்திற்கு 2363 வாக்குகளும், அனுரகுமார திசாநாயக்க - திசைகாட்டி சின்னத்திற்கு – 2304 வாக்குகளும், ஆ.மு.சிவாஜிலிங்கம் மீன் சின்னத்திற்கு 800 வாக்குகளும், ஏனைய 29 வேட்பாளர்களுக்கும் மொத்தமாக 8217 வாக்குகள் அளிக்கப்பட்டன.

மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குவீதம் 76 வீதம், அளிக்கப்படாத வாக்கு 24 வீதம் அண்ணளவாக 96,000ஆயிரம் வாக்குகளாகும்.

கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கேற்பட்ட கசப்புணர்வுகளும், தமிழ் மக்களின் கோரிக்கை தொடர்பாக தாங்கள் வெளிக்காட்டிய கருத்துக்கள் தொடர்பாகவும், இத்தோடு ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களின் வாக்குகளை நம்பியே செயற்பட்டதன் காரணமாகவும் தமிழ் மக்கள் தங்களுடைய நிலைப்பாட்டை வாக்களிப்பின் ஊடாக வெளிக்காட்டி உள்ளனர்.

எம் மக்களைப் பொறுத்தவரையில் அனைத்தின மக்களுடனும் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடனும், ஐக்கியப்பட்டு வாழவே விரும்புகின்றனர்.

ஒரு நாட்டின் ஜனாதிபதி என்பது அந் நாட்டில் வாழுகின்ற பல்லினமதம், கட்சி பாராது அனைத்து மக்களையும் சமமாக வழிநடத்துவதே ஆகும். தாங்கள் பதவிப் பிரமாணம் செய்யும் போது வட கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கையாளத் தயாராக இருப்பதாக தெரிவித்தது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

எனவே எதிர்வரும் காலங்களில் வடகிழக்கு மக்களின் ஆணையை ஏற்றுக் கொண்டு அம்மக்களை வென்றெடுப்பதற்கான நல்ல எண்ண செயற்திட்டங்களை அமுல்படுத்த வேண்டிக் கொள்வதோடு, தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இம் மாவட்டத்தின் நீண்ட பல வருடங்களுக்கு பிறகு வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்க வைப்பதற்காக காரணமாக இருந்த அனைத்து மக்களுக்கும் இத்தேர்தலை இம் மாவட்டத்தில் ஜனநாயக ரீதியாக சிறப்பான முறையில் செய்து முடிப்பதற்கு காரணமாக இருந்த அரசாங்க அதிபர், உத்தியோகத்தர்கள், தேர்தல் அலுவலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சட்ட ஒழுங்கை நிலை நாட்டியவர்கள் எவ்வித வன்முறையில் ஈடுபடாமல் செயற்பட்ட அரசியற் கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!