இலங்கை மக்களை வாழ்த்துவதாக அமெரிக்கா அறிவிப்பு

50shares

இலங்கையர்களின் ஜனநாயக ரீதியான ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களை அமெரிக்கா வாழ்த்துவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு என்பதற்கு பொருத்தமான வகையில் சுதந்திரமானதும் நீதியானதும் மற்றும் வெளிப்படையானதுமானஜனாதிபதித் தேர்தலொன்றின் மூலம் இலங்கை அதனது குடியரசின் வலிமை மற்றும் மீளெழுச்சியை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமைதியான தேர்தலொன்றை ஊக்குவித்தமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழு, சிவில் சமூகம் மற்றும் அரச அதிகாரிகளை நாம் பாராட்டுகிறோம்.

உயரிய நல்லாட்சி, விரிவாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கம் ஊடாக நாட்டின் இறையாண்மைக்கு ஒத்துழைப்பளிப்பதிலும் மற்றும் அனைத்து நாடுகளும் செழிப்படையக்கூடிய இந்து-பசுபிக் பிராந்தியமொன்றை பேணிப் பாதுகாப்பதிலும் புதிய ஜனாதிபதியுடனும் அனைத்து இலங்கை மக்களுடனும் எமது பணியை தொடர்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்