பணம் படைத்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சாதகமான நிலை! சர்வதேச கண்காணிப்பாளர்கள் பாராட்டு

107shares

தேர்தல் பிரசாரங்களுக்கான செலவுகளை கட்டுப்படுத்த தேவையான சட்ட வரைச் சட்டம் இலங்கையில் இல்லாமையால் பணம் படைத்த வேட்பாளர்களுக்கு சாதகமான நிலை இருந்தது.

இதனால் தேர்தல் செலவுகளை பரிசீலிக்க முடியவில்லை என சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்மேலும், ஜனாதிபதி தேர்தல் 2019 ஐ பெரும்பாலும் அமைதியாகவும், முறையாகவும் வெற்றிகரமாகவும் நடத்தியதையிட்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை மக்களை பாராட்டியுள்ளனர்.

சுதந்திர தேர்தல்களுக்கான ஆசிய வலைப்பின்னல் (Anfrel) என்ற அமைப்பு வெளியிட்ட இடைக்கால அறிக்கையிலேயே இவ்வாறு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கிய ஒரேயொரு சர்வதேச அரச சார்பற்ற அமைப்பு (Anfrel) அமைப்பாகும். 83.9 சதவீதம் என்ற அளவிலான அதிக வாக்களித்தவர்கள் வீதமானது உண்மையான ஜனநாயகத்தை எட்டும் வகையிலான நாட்டின் கடப்பாட்டையும் முதிர்ச்சியடைந்த அரசியல் நடைமுறையையும் எடுத்துக்காட்டுவதாக மேற்படி அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக் குழுத் தலைவரான டமாஸோ மெக்புவல் மற்றும் அவரது உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மோசமான தேர்தல் வன்முறைகள் எதுவும் இல்லாத நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தமை இலங்கையர்களுக்கு பெருமையை தரும் ஒரு சந்தர்ப்பம் என்று அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரங்களுக்கான செலவுகளை கட்டுப்படுத்த தேவையான சட்ட வரைச் சட்டம் இல்லாமையால் பணம் படைத்த வேட்பாளர்களுக்கு சாதகமான நிலை இருந்தது.

இதனால் தேர்தல் செலவுகளை பரிசீலிக்க முடியவில்லை. ஐக்கிய நாடுகளின் ஊழல் எதிர்ப்பு இணக்க ஒப்பந்தத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.

இந்நிலையில் வேட்பாளர்களின் மற்றும் அரசியல் கட்சிகளுள் தேர்தல் செலவுகள் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதை அனைத்து நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்று மேற்படி அமைப்பின் இடைக்கால அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்