உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ள ஜனாதிபதி கோட்டாபய!

23shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு தற்சமயம் ஆரம்பித்துள்ளது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் இன்றைய தினம் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று காலை அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன மற்றும் பிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். அத்தோடு ஜனாதிபதி செயலாளராக முன்னாள் திறைசேரி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர நியமிக்கப்படவுள்ளார் எனவும் தகவல் வெளியானியுள்ளது.

இதனிடையே புதிய பாதுகாப்பு செயலாளர் ஒருவரை நியமிக்கவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் எனவும், அதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமானவர் என கருதப்படுவதாகவும் தென்னிலங்கை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!