தேர்தல் முடிவுகளின் பின்னர் அனுர குமார திஸாநாயக்க விடுத்துள்ள எச்சரிக்கை!

210shares

நாட்டிலுள்ள சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான நல்லிணக்கம் தேர்தல் முடிவுகளின் பின்னர் இடம்பெற்ற பல நிகழ்வுகளால் மேலும் சிதைவடைந்து நம்பிக்கையற்ற ஒரு சமூகமொன்று தோற்றம் பெறும் சாத்தியம் நிலவுவதாக தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜே.வி.பி யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவியேற்ற நிலையிலேயே ஜே.வி.பி-யின் தலைவர் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இந்த எச்சரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

“இந்த தேர்தலின் பின்னர் நாட்டில் எவ்வாறானதொரு நிலமை ஏற்படும் என்பது தொடர்பில் எம் அனைவருக்கும் ஒரு நிலைப்பாடு இருந்தது. பொருளாதார ரீதியில் எமது நாடு எத்திசையில் பயணிக்க வேண்டும்? ஜனநாயகத்திற்கு எவ்வாறான ரீதியில் சவால்கள் ஏற்படும்? சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடையே சமாதானத்தை விதைப்பதற்கு பதிலாக அவர்களுக்கிடையே மோதல், சந்தேகம் மற்றும் நம்பிக்கையின்மையின்மை மேலும் வளர்ச்சியடைந்து வேறொரு திசைக்கு பயணிப்பது மேலும் தெளிவாக விளங்குகின்றது. அதன் காரணத்தால் இந்த நாடு பற்றியும் நாட்டு மக்களின் உரிமைகளுக்காக வேண்டியும் சிந்தித்து நாம் தொடர்ந்து போராடுவோம் என்பதையும் அதற்காகா முன்னிலையாகுவோம் என்பதையும் இந்த நாட்டு மக்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

எமது நாட்டின் 70 வருடகால பொருளாதார கொள்கையினை எங்கு கொண்டு வந்துள்ளோம் மற்றும் தற்போது எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பது மிகத் தெளிவாக தெரிகின்றது. அதேபோல ஜனநாயகம் மீது எவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பதும் மிகத் தெளிவாக விளங்குகின்றது.

நாட்டிலுள்ள சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான நல்லிணக்கம் தேர்தல் முடிவுகளின் பின்னர் இடம்பெற்ற பல நிகழ்வுகள் மூலம் மேலும் சிதைவடைந்து நம்பிக்கையற்ற ஒரு சமுதாயம் தோற்றம் பெறும் என்பதையே காண்பிக்கின்றது. அதன் காரணத்தால் நாம் கடந்த காலங்களைவிட நாம் முன்வைத்த அரசியலும் வழியுடே இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சிறப்பாக அமையும். அதனால் அந்த பாதையில் இருந்து விலகாது தொர்ந்து போராடவும், மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கவும் தயாராக இருக்கின்றோம் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச 13 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாரிய வெற்றியை பதிவு செய்தாலும் வடக்கு கிழக்கு மக்கள் தமது சமூகம் முகம்கொடுக்க வேண்டிய பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு பெறவே ஒரு அரசியல் தீர்வினை எடுத்து அதனை ஜனாதிபதித் தேர்தலில் மிகத் தெளிவாக அறிவித்திருப்பதாகவும் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.

“பாரிய பிரிவினையொன்று காணப்பட்டது. விசேடமாக தேர்தல் முடிவுகளிலும் இந்த பிரிவினை மிகத் தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது. ஒரு கூட்டம் விசேடமாக இனவாதத்தை தமது அடிப்படையாகக் கொண்டு நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பின் முக்கிய பங்குதாரர்களாக்கிக்கொண்டு பிரிவனை அரசியல்வாத கருத்துக்களை வளர்த்தனர். அதனையே தெற்கு அரசியல் முடிவுகளிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அதேபோல வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு நாட்டில் உருவாகும் அந்த அரசியல் பிரச்சினையிலிருந்து தாம் சமூகமாக நிலைத்து நிற்க மற்றும் முகம்கொடுக்கக்கூடிய சவால்கள் தொடர்பில் உணர்ச்சியொன்று காணப்பட்டது. அதன்காரணத்தால் அவர்களது சமூகத்தின் பாதுகாப்பு நோக்கி அவர்கள் ஒரு அரசியல் தீர்வினை எடுத்துள்ளதை இந்த தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. அதனால் அவ்வாறான பாரிய பிரிவொன்றும் முரண்பாடும் இருக்கும் சந்தர்ப்பத்திலும் 4லட்சத்துக்கும் அதிகமான மக்கள் எம் மீது நம்பிக்கை வைத்து எமக்கு வாக்களித்துள்ளனர். அந்த அனைத்து மக்களுக்கும் நாம் நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேவேளை ஸ்ரீலங்காவில் இம்முறை நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் சுமூகமான தேர்தல் என பலதரப்பினர் தெரிவித்துவருகின்ற போதிலும் அதனை நிராகரித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இம்முறை தேர்தல் வன்முறைகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“இடம்பெற்ற இந்த தேர்தலை பல தரப்பினர் சுமூகமாக எந்தவொரு வன்முறையும் இன்றி இடம்பெற்ற தேர்தல் என அறிவித்திருந்தனர். எனினும் நாம் அதனை அவ்வாறு நம்பவில்லை. எமது நாட்டில் தேர்தல் வன்முறைகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதாகவேயே நாம் கருதுகின்றோம். ஆரம்ப காலத்தில் வீடுகளுக்கு சென்று தேர்தல் அட்டைகளை கைப்பறித்து வாக்களிக்க வேண்டிய நபர்களுக்கு பதிலாக வேறொருவரை பயன்படுத்தி வாக்களித்தது தொடக்கம் பின்நாளில் பெட்டியினை மாற்றுதல் என பல விதமான தேர்தல் வன்முறைகளினை அவதானித்துள்ளோம். இவை அனைத்தினதும் நோக்கம் நாட்டு மக்களின் உண்மையான விருப்பத்தினை சாதாரனமாக தெரிவிக்க வாப்பளிக்காமையாகும். அவ்வாறான நிலையில் இந்தமுறை இடம்பெற்ற தேர்தலும் அவ்வாறே இடம்பெற்றது. ஸ்ரீலங்காவின் அரச தொலைக்காட்சியும் மற்றும் ஒரு சில தனியார் தொலைக்காட்சியும் பொது மக்களின் விருப்பத்தினை தெரிவிக்க வாய்ப்பளிக்கவில்லை. அந்த ஊடகங்கள் உண்மையான விம்பத்தை மாற்றியமைக்க மக்கள் மீது அழுத்தத்தினை பிரயோகித்துள்ளனர். ஊடகத்தின் பொய்கள் குறித்து எங்களுக்கு பாரிய பிரச்சினை இல்லை. எனினும் இந்த ஊடகம் மக்கள் மத்தியில் தவறான ஒரு விம்பத்தை உருவாக்குகின்றது. அது பயங்கரமானதொரு செயற்பாடாகும்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!