புதிய ஜனாதிபதி பதவியேற்றபின் நடைபெறவுள்ள முதலாவது விசேட கூட்டம்!

177shares

கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்றிரவு 7 மணி அளவில் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷவும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளார். இதன் போது கூட்டு எதிரணி எதிர்காலத்தில் செயற்பட வேண்டிய விதம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட உள்ளது.

அதேபோல் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்தும், நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் முதலாவது கூட்டமாக இது கருதப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!