அரசியல் கைதிகள் விடுதலையென்பது ஒரு சின்ன பிரச்சனை; 134 பேரையும் நிச்சயமாக விடுவிப்போம்!

391shares

அரசியல் கைதிகள் விடுதலையென்பது ஒரு சின்ன பிரச்சனை, 134 பேரையும் நிச்சயமாக விடுவிப்போம் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு நேற்று விஜயம் செய்த அவர் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் மேற்கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில், அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் விடயம் தொடர்பாக அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். அது ஒரு சிறு பிரச்சனை. இந்த 134 பேரும் சாதாராண போராளிகள். இது ஒரு பாரிய பிரச்சனையாக உலகளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை நாம் கோட்டாவிடம் தெரிவித்துள்ளோம். நாம் நிச்சயமாக விடுவிப்போம் என எமக்கு தெரிவித்துள்ளனர். எனவே அதில் உள்ள சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோர் இருக்கின்றார்களா என்பதை அரசு தலைவர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அதனையும் கோட்டாவிடம் நாம் எதிர்பார்க்கிறோம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட வருடத்திற்கு பின்னர் அவர்களிற்கு மரண அத்தாட்சி கொடுத்திருக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க
முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

இலங்கைக்கு நிபந்தனை விதித்ததா இந்தியா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தகவல்

இலங்கைக்கு நிபந்தனை விதித்ததா இந்தியா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தகவல்