அமளிதுமளியுடன் ரணகளமான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம்! மீண்டும் சஜித்திற்காக போர்க்கொடி! ஆத்திரத்தில் ரணில்!

793shares

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு நேற்றைய தினம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய போது பெரும் அமளி ஏற்பட்டது என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரம சிங்க பதவியிலிருந்து விலகி கட்சித் தலைவர் பதவியையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் சஜித்துக்கு வழங்க வேண்டுமென சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்க்கம் செய்ததையடுத்தே இந்த அமளி ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சுஜீவ சேனசிங்க , கபீர் ஹஷீம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு போர்க்கொடி தூக்கியதுடன் , 25 வருடகாலம் இந்தப் பதவிகளை வகித்து வரும் ரணிலால் நிலையான ஆட்சியொன்றை ஏற்படுத்த முடியாமல் போனதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், ரணிலுக்கு ஆதரவாக சரத் பொன்சேகா , ராஜித, தயா கமகே , விஜிதமுனி சொய்சா ஆகியோர் பேசியதால் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழப்ப நிலையின் போது கடுந்தொனியில் பேசிய ரணில்,

நான் ஜனதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் பேசிய பின்னர் தேர்தல் தொடர்பில் ஒரு முடிவை எடுப்பேன். நான் இங்கு பேசத் தொடங்கினால் பல விடயங்களை சொல்ல வேண்டி வரும்.

அத்துடன் தேர்தலில் ஏன் தோல்வியடைந்தோம் என்பதனை கண்ணாடி முன் நின்று ஒவ்வொருவரும் கேட்டுப் பாருங்கள். அப்போது பதில் கிடைக்கும் எனவும், இப்போது நான் பேசினால் பல விடயங்களை சொல்ல வேண்டிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அமளிகளுக்கு மத்தியில் எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் முடிவடைந்தது. மேலும் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கில் பொலிஸாருக்கும் -இராணுவத்துக்கும் இடையில் வெடிக்கவுள்ள மோதல்

வடக்கில் பொலிஸாருக்கும் -இராணுவத்துக்கும் இடையில் வெடிக்கவுள்ள மோதல்

இத்தாலியில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள மாற்றம்

இத்தாலியில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள மாற்றம்

யாழில் அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள்

யாழில் அதிகாலை வேளை திடீரென புகுந்தது சருகுபுலி - பறிபோயின ஒன்பது உயிர்கள்