ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவாகியுள்ள நிலையில் பதிவாகியுள்ள வன்முறைச் சம்பவங்கள்! மஹிந்த விடுத்த பணிப்புரை!

123shares

ஸ்ரீலங்கா ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகி இரண்டு நாட்களாகின்ற நிலையில், இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டு சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துவதற்கான பணிப்புரையை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இன்றைய தினம் விடுத்திருக்கின்றார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை நகருக்கு அருகிலுள்ள கனேபல்ல தோட்டத்திற்குள் நேற்றைய தினம் இரவு நுழைந்த காடையர்களால் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் குடியிருப்புகள் சிலவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதுபோதையுடன் நேற்று இரவு தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த நபர்கள், லயன் குடியிருப்புகளுக்குள் நுழைந்து பெறுமதியான வீட்டுப் பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியிருப்பதோடு அங்குள்ள சில பெண்கள் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்திருப்பதாக கனேபல்ல தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு ஏன் அவருக்கு வாக்களித்தீர்கள் என்று அச்சுறுத்தல் தொனியில் குறித்த நபர்கள் தங்களை மிரட்டியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இதுகுறித்து அவர்கள் எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்திருக்கின்றனர்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக எட்டியாந்தோட்டை பொலிஸாரிடம் வினவியபோது, விசாரணைகள் இடம்பெறுவதாக பதிலளித்தனர். இதேபோன்று ஜனாதிபதி தேர்தல் தினமான கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை மாலை கேகாலை மாவட்டம் தெரணியகல நூரி தோட்டத்தில் ஜீப் வண்டியில் வந்த இனந்தெரியாக நபர்கள் அங்கு வாழும் இந்திய வம்சாவளி மக்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று இன்றுடன் மூன்றே நாட்களாகின்ற நிலையில் இப்படியான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து கவனம் செலுத்தியுள்ள எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, உடனடி விசாரணையை நடத்துமாறு சப்ரகமுவ மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருக்கின்றார்.

இதையும் தவறாமல் படிங்க
கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!