மீண்டும் விளக்கமறியலில் முக்கிய பிரமுகர்கள்!

36shares

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே அவர்களுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியான உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தற்கொலைத் தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதோடு 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு வெளிநாட்டு உளவுப் பிரிவுகள் பலதடவை எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் தகுந்த நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தவறியதாக குற்றச்சாட்டு காணப்படுகின்றது. இந்நிலையில், இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஸ்ரீலங்கா அரச தலைவரினால் விசாரணை ஆணைக்குழு என்பன அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

இதனிடையே தம் கடமையை சரிவர செய்யத்தவறிய குற்றச்சாட்டை எதிர்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவின் படி அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்றைய தினம் காலை கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்களை எதிர்வரும் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!