பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படும்; ஞானசார தேரர் அதிரடி அறிவிப்பு!

239shares

பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படுமென, அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்த நாட்டுக்கு இப்போது, சிறந்த தலைமைத்துவமொன்று கிடைக்கப்பெற்று உள்ளதாகக் கூறிய ஞானசார தேரர், பொதுபல சேனா என்ற அமைப்பின் தேவை, இனி தேவைப்படாது எனும் பட்சத்தில், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, தமது அமைப்பைக் கலைத்துவிடத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய பிரதேசத்தில் இன்று (19) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.,

சிறுபான்மையினரின் வாக்குகளின்றி, இந்த நாட்டில் அரசாங்கமொன்றை உருவாக்க முடியாதென்ற கருத்து நிலவியிருந்ததாகவும் ஆனால் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், அந்தக் கருத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளதாகவும் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த நாட்டுக்கு இப்போது, சிறந்த தலைமைத்துவமொன்று கிடைக்கப்பெற்று உள்ளதாகக் கூறிய ஞானசார தேரர், பொதுத் தேர்தலின் பின்னர், நல்லதோர் அமைச்சரவையுடன், நல்ல பயணமொன்றை மேற்கொள்ள முடியுமென்றும் இந்த நாட்​டைக் கட்டியெழுப்ப, இப்போது நல்ல தலைவரொருவர் கிடைத்திருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க