மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும்!

40shares

ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே நேர்கோட்டில் செல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற வகையில், கோட்டபாய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து தற்போதைய அரசாங்கம் பதவி விலகி மீண்டும் நாட்டில் உடனடியாக ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

கிழக்கு வடக்கு மற்றும் தமிழர் பரந்து வாழ்கின்ற பகுதிகளில் தமிழர்களை ஏமாற்றுகின்ற, போலியாக அரசியல் செய்கின்ற பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் மாத்திரம் அறிக்கைகளை விட்டுவிட்டு எதுவும் செய்யாமல் இருக்கின்ற அரசியல் தலைமைகளை நம்பி பின்னால் சென்று கடந்த 62 வருடங்களுக்கு மேலாக மக்களின் இருப்புகளை இல்லாமல் செய்திருக்கின்ற போலி அரசியல் வார்த்தைகளுக்குப் பின்னால் இனிச் செல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

செல்வதும், ஏமாற்றப்படுவதும் இதுவே இறுதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் கிழக்கு மாகணத்தில் இருக்கின்ற தமிழர்கள் தலைவர் சி.நேசதுரை சந்திரகாந்தனின் வழி நடத்தலில் தமிழ் மக்கள் விடுதுலைப்புலிகள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று எங்களால் குறிப்பிடப்பட்ட கிழக்கு மாகாணத்தை மீட்க வேண்டும் என்ற அந்தக் கோசத்தின் அடிப்படையில் வாக்களித்திருக்கிறார்கள்.

உண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வாக்கு வங்கியினை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார்கள். இருந்தாலும் வாக்களிப்பில் ஒரு சரிவிருக்கிறது அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். இருந்தாலும் அதனை எதிர்காலத்தில் சரி செய்து கொண்டு தொடர்ந்தும் எமது கட்சி இந்த கிழக்கு மக்களுக்காக கொடுக்கப்பட்ட வாக்குகளை நிறைவேற்றும் வகையில் செயற்படும்.

ஜனாதிபதி தனது பதவியேற்பில் குறிப்பிட்டது போன்று வாக்களித்த, வாக்களிக்காத மக்களுக்குமாக எமது கட்சி வாக்களிக்காத மக்கள் என்று பிரித்து பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் சென்றடையக் கூடிய சூழலை கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த இலங்கையிலும் ஜனாதிபதியின் ஊடாக செயற்படுத்தப்படும். கிழக்கு மாகாணத்தை அதிகார வெறி கொண்டவர்களிடமிருந்து மீட்டெடுப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!