வாகரையில் குடும்பஸ்தர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட மர்ம நபர்கள்!

24shares

வாகரை தட்டு முனை ஆற்றில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட குடும்பஸ்த்தர் ஒருவர் கட்டுத் துப்பாக்கி வெடிக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று திங்கள் கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். உயிரிழந்தவர் சின்னத்தட்டு முனை வாகரையைச் சேர்ந்த க.காளிதாஸ் வயது (37) என்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் தமது நண்பருடன் வழமை போன்று மீன்பிடிக்க தோணியில் சென்ற போது 3 பேர் ஆற்றுக்குள் வந்து கையில் இருந்த கட்டுத் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றதாகவும் அவர்களில் இருவரை தம்மால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தமது பொலிஸ் முறைப்பாட்டில் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை அவர்கள் மது போதையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்ட்டவர் எந்த கட்சியுடனும் தொடர்பற்றவர் என்றும் குறித்த சம்பவம் தொடர்பாக வாகரை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க