ஐ.தே.க வின் ஆட்சி நாட்டுக்கு பொருத்தமற்றதென மக்கள் நிரூபித்துள்ளனர்!

12shares

ஐ.தே.க வின் ஆட்சி நாட்டுக்கு பொருத்தமற்றதென மக்கள் நிரூபித்துள்ளனர் என எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும்..

நாட்டு மக்கள் இரண்டாவது தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடித்துள்ளனரெனத் தெரிவித்த கெஹேலிய ரம்புக்வெல்ல, தார்மீக அரசியலை பின்பற்றி ஐ.தே.க எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்று கருதுவதாகத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலைப் போன்று, இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் ஐ.தே.க வின் ஆட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர். ஐ.தே.க வின் ஆட்சி நாட்டுக்கு பொருத்தமற்றதென மக்கள் நிரூபித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

அத்துடன், தார்மீக அரசியல் குறித்து பேசுகின்ற இத்தருணத்தில், ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் எதற்காக மக்கள் முன்னால் செல்ல வேண்டும் என்பது குறித்து அக்கட்சி சிந்திக்க வேண்டும் என கெஹேலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!