ஸ்ரீலங்கா அதிகாரியால் கழுத்து அறுக்கப்படும் என கொலை அச்சுறுத்தல்! கடும் குளிரின் மத்தியிலும் பிரித்தானிய தமிழர் போராட்டம்!

29shares

பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டொ பிரித்தானியாவில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் முன்னால் 04/02/2018 தினத்தன்று ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களின் கழுத்து அறுக்கப்படும் என சைகை மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு இன்று வெஸ்மினிஸ்டர் மெஜிஸ்டேர்ட் நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்த இவ்வழக்கில் தமிழ் மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி நீதிமன்றத்திற்கு முன்னால் புலம் பெயர் அமைப்புக்கள் ஆர்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். காலை 10 மணி முதல் கடுங்குளிரினையும் பொருட்படுத்தாமல் பிற்பகல் வரையிலும் தொடர்ச்சியாக கோஷங்களை முழக்கமிட்டு இப்போராட்டத்தினை நடாத்தினர்.

பிரித்தானியாவின் நீதித்துறையில் அரசியல் இருக்கக்கூடாது என்றும், போர்க்குற்றவாளியான பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யக் கோரியும் ஆர்பாட்டக்காரர்கள் தமது நியாயமான கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இனப்படுகொலை செய்த யுத்த குற்றவாளிகளை பிரித்தானியாவுக்குள் அனுமதியாதே, இலங்கைக்கு வழங்கும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்து, பிரித்தானியாவில் ஜனநாயக ரீதியில் போராடுபவர்களின் விபரங்களை இலங்கை தூதரகம் சேகரிப்பதை அனுமதியாதே என்ற கோரிக்கைகளும் எழுப்ப்பட்டன.

இலங்கையில் பெரும்பான்மை பௌத்த சிங்கள வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட 7 வது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவியேற்ற முதல் நாளிலேயே தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இலங்கை பௌத்த அரசின் செயற்பாடுகள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தராது என்பது திண்ணம் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!