மங்களவுக்கு ஏற்பட்ட நிலை! ஐ.தே.கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு

35shares

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தமைக்கான பொறுப்பில் அதிகளவு பங்கை மங்கள சமரவீர ஏற்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மங்களவுக்கு எதிரான குற்றச்சாட்டு அதிகரித்து வருவதாகவும் தெரியவருகிறது.

தற்போதாவது மங்கள சமரவீர அமைதியாக இருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கட்சி அல்லது ஒரு அணியாக தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக வேறு வழிமுறைகள் ஊடாக செயற்பட்டதால், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி இலக்கை நோக்கி செல்லமுடியாது போனதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் சஜித் பிரேமதாச மீண்டும் தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கட்சியின் பொறுப்பை அவருக்கு வழங்கி, புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக முதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதித் தேர்தலில் எடுக்கப்பட்ட அனைத்து தவறான முடிவுகள்,வேலைத்திட்டங்கள் போன்றவற்றை மீளாய்வு செய்து, சில நபர்கள் குறித்து நேரடியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் தலை தூக்க வேண்டும் என்பதால், கட்சியை அடிப்படையாக கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் கீழ் மட்டத்தில் கட்சியை மீண்டும் மறுசீரமைப்புக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போது மங்கள சமரவீர மற்றும் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்திய ஏனையோர் தொடர்பில் கட்சிக்குள் எதிர்ப்புகள் உருவாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!