புத்தளம்- குருநாகல் பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து; பலர் படுகாயம்!

6shares

மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், நால்வர் காயமடைந்துள்ளதாக்க தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து புத்தளம்- குருநாகல் பிரதான வீதியில் இன்று (19) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.,

புத்தளம் நோக்கிப் பயணித்த கெப் வாகன சாரதி நித்திரை கலக்கத்துடன் அதிக வேகத்தில் பயணித்துள்ள நிலையில், எதிரே வந்த கெப் வாகனம் மற்றும் வான் என்பவற்றுடன் மோதுண்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் அடங்கலாக நால்வர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, குறித்த வாகனங்களில் பயணித்தவர்கள் படுகாயமடைந்துள்ளனரென மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க