கோத்தாபய சிங்கள மக்களின் வாக்குகளாலேயே ஆட்சிபீடம் ஏறியுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்!

13shares

ஸ்ரீலங்காவில் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்ச சிங்கள மக்களின் வாக்குகளாலேயே ஆட்சிபீடம் ஏறியுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய சமூகங்கள் அவருக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்பதை புரிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்திருந்தாலும் தாம் ஆதரித்த வேட்பாளர் வெற்றிபெறவில்லை என்ற கவலை அந்த மக்களுக்கு காணப்படுவதாக தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எனினும் தமிழர்களும், தமிழ் பேசும் மக்களும் இதன் மூலம் ஒரு செய்தியை நாட்டிற்கு தெரிவிக்கக்கூடியதாக இருந்தாகவும் கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ஐ.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!