தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட இறுதி தருணமாக நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் இருக்க வேண்டும்; பிரசாந்தன்!

15shares

தமிழ் மக்களின் தலைமைகள் என மார்தட்டிக் கொள்பவர்களால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட இறுதி தருணமாக நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாய்ச் சவடால் அரசியல் காரணமாக தமிழ் மக்களின் இருப்பும் கேள்விக் குறியாகியிருப்பதாகவும் எச்சரித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மக்கள் வழங்கியுள்ள ஆணையை ஏற்று பதவி விலகி நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக் கொண்ட பூபாலபிள்ளை பிரசாந்தன், கட்சியின் தலைவரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனவும் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்காவில் நவம்பர் 16 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

பதவிப்பிரமாணம் செய்துகொண்ட போது கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரையின் போது ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக தன்னை பெரும்பான்மையின சிங்கள பௌத்த மக்களே ஆட்சிபீடம் ஏற்றியிருப்பதாக பகிரங்கமாக அறிவித்ததுடன், தனது வெற்றியுடன் இணைந்துகொள்ளாத தமிழ் – முஸ்லீம் மக்கள் உண்மையான ஸ்ரீலங்கா பிரஜைகளாக தன்னுடன் இணைந்து பணியாற்ற வருமாறு அழைப்பும் விடுத்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்காகவும் சேவையாற்ற தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தயாராக இருப்பதாக கூறி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!