ஜன்னலில் தொங்கவிடுவதாக கூறியசரத் பொன்சேக்கா எங்கே? ராஜித எங்கே?

31shares

ஐக்கிய தேசியக் கட்சி தலைவரின் முதுகெலுப்பு இல்லாத நடவடிக்கையால் அந்த கட்சி பிளவடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

ஐக்கிய தேசியக் கட்சி நான்கு துண்டுகளாக பிளவடையும் என குறிப்பிட்டார்.

ஐ.தே.க தலைவரின் முதுகெலும்பு இல்லாத செயற்பாடுகளை அறிந்துள்ளதாக தெரிவித்த அவர், ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு தோல்வியடைந்த போதும் மஹிந்த ராஜபக்ஷவும் அவருடன் இணைந்தவர்களும் சோர்ந்து போகவில்லை எனவும் கூறினார்.

ஆனால் இன்று தோல்வியடைந்தவுடன் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஓடி ஒழிந்துள்ளதாகவும் கூறினார்.

குறிப்பாக ராஜித்த மற்றும் பாட்டலி போன்றோர் எங்கே என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அவர்கள் வெளியில் வந்து பேச வேண்டும் என கூறிய அவர் ஜன்னலில் தொங்கவிடுவதாக கூறியசரத் பொன்சேக்கா இன்று எங்கு எனவும் வினவினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இன்று பல்வேறு திசைகளில் சிதறிபோயுள்ளதாகவும்அவர்களை 20 வருடங்களானாலும் ஒன்றாய் பொருத்த முடியாது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க