அதிகாலையில் இடம்பெற்ற அனர்த்தம்! முக்கிய கட்டடம் ஒன்று எரிந்து நாசம்! விசமிகளின் சூழ்ச்சியா?

78shares

மனம்பிடிய மணல் நிறுவன கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

பொலனறுவை, மனம்பிடிய மகாவலி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள குறித்த கட்டடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டடம் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கி வந்துள்ளது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இருந்தார்.

ஊழல் மற்றும் மோசடிகளை மூடி மறைப்பதற்காக குறிப்பிட்ட சிலர் மேற்கொண்ட சூழ்ச்சி நடவடிக்கையே இதுவென பிரதேச மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலனறுவை நகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் பொலனறுவை காவல்துறையினர் இணைந்து குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மோப்ப நாய்களின் உதவியுடன் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி