ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவிற்கு கூறிய முக்கிய செய்தி

  • Dias
  • November 21, 2019
393shares

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ருவிற்றரில் வாழ்த்து தெரிவித்துள்ளார், அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ.

ஜனநாயகத் தேர்தலை நடத்திய இலங்கை மக்களை பாராட்டுகிறோம். பாதுகாப்புத் துறை சீர்திருத்தம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மதித்தல் ஆகியவற்றில் இலங்கையின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்த இலங்கையுடனும், ஜனாதிபதியுடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ருவிற்றரில் பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய...

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மற்றும் முதலீட்டை மேம்படுத்த இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல் உள்ளிட்ட கடந்த கால விவகாரத்தை திரும்பிப் பார்ப்பது தொடர்பான கோட்டாவின் பதில் குறிப்பிடப்பட்டுள்ளமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது...

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்