இவர்களில் வடக்கின் ஆளுநர் யார்? வெளியான தகவல்..

721shares
Image

வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோரின் பெயர்களும் பரந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றனர்.

இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரனை நியமிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க