புதிய பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்!

6shares

புதிய பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இராஜினாமாவை அடுத்து, நேற்று (21) பிற்பகல் மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் முன்னரும் மகிந்தவின் பிரதம அதிகாரியாக செயற்பட்டவராவார்.

இதேவேளை லிட்ரோ காஸ் நிறுவனத்தின் 500 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்தார் எனத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் அண்மையில் இவர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க