அமெரிக்காவின் அறிக்கையை நிராகரித்தது இலங்கை அரசு!

25shares

சர்ச்சைக்குரிய எம்.சி.சி ஒப்பந்தம் விரைவில் இலங்கையில் தொடங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் முன்னணி அதிகாரி தெரவித்துள்ளதை இலங்கையின் புதிய இடைக்கால அரசாங்கம் நிராகரித்துள்ளது.

எம்.சி.சி ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யவும், அதன் உட்பிரிவுகளை ஆழமாக ஆய்வு செய்யவும், ஆட்சேபனைக்குரிய அல்லது சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளைக் கொண்ட எந்தவொரு ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்யவோ அல்லது நிராகரிக்கவோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதி அமைச்சகத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

முந்தைய அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட அல்லது விவாதிக்கப்பட்ட ஏனைய அனைத்து ஒப்பந்தங்களையும் போலவே எம்.சி.சி ஒப்பந்தமும் மறு ஆய்வு செய்யப்படும் என்று வெளியுறவுஅமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

"எதிர்கால ஒப்பந்தங்கள் அனைத்தும் மறு ஆய்வு செய்யப்பட்டு, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் . இது முன்னைய அரசாங்கம் புறக்கணித்த விதிமுறை" என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை அமெரிக்க வெளியுறவுத்துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் முதன்மை துணை உதவி செயலாளர், தூதர் அலிஸ் வெல்ஸ், அமெரிக்கா விரைவில் இலங்கையில் எம்.சி.சி ஒப்பந்தத்தை தொடங்கவுள்ளதுஎன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

மோசமாக அத்துமீறும் சீனா! தயார் நிலையில் அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு