டெல்லியில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சிவப்பு கம்பளம்! சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை

  • Dias
  • November 29, 2019
70shares

இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை கருப்பு கொடிகளுடன் முற்றுகையிட்டு ஆவேச முழக்கமிட்டு போராட்டம் நடத்தியதியுள்ளனர்.

3 நாள் பயணமாக இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே நேற்று இந்தியா சென்றுள்ளார்.

டெல்லி வந்த அவருக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிக்கையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை சந்திக்க போகும் கோத்தபய இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கோத்தபாயாவின் இந்திய வரவை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டம் 10 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் உமாபதி தலைமையில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

போராட்டத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தவசிக்குமரன், கரு அண்ணாமலை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழீழ உணர்வாளர்கள் பங்கேற்று இலங்கை ஜனாதிபதி கோட்டபாயாவின் இந்திய பயணத்தை கண்டித்தும் ,இந்திய மத்திய அரசு உடனே கோட்டபாயாவை திருப்ப அனுப்பவேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கமிட்டவாறு தூதரகத்திற்குள் நுளைய முற்பட்டனர் இவர்கள் அனைவரையும் தமிழ காவல்துறையினர் கைது செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏ.சி.எஸ் திருமண மண்டபத்திலே அடைத்துள்ளதாக தமிழக செய்திகள் தெருவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க
முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

முதன்முறையாக விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கு இரகசிய ஆவணத்தை அனுப்பிய கோட்டாபய அரசு

இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு பயணத்தடை? ஐ.நாவில் வெளியான பகிரங்க அறிக்கை

இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்கு பயணத்தடை? ஐ.நாவில் வெளியான பகிரங்க அறிக்கை

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி

விடுதலைப்புலிகளின்நிலப்பகுதியில் சிக்கிய அநுருத்த ரத்வத்த குழுவினரை காப்பாற்றியவருக்கு கிடைக்கவுள்ள உயர் பதவி