தனிமையில் வசிக்கும் சஜித்! ரணில் மேற்கொண்டுள்ள தீர்மானம்!

10shares

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியிலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார்.

தற்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், சஜித் தொடர்ந்தும் புறக்கணித்து வருகிறார்.

இந்நிலையில் ஐக்கி தேசிய கட்சியின் தலைவர்களுக்காக, ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் சிலர் கூடிய கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ வருகை தராமையினால் இறுதியில் தீர்மானம் மேற்கொள்ள முடியவில்லை.

கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கி விட்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியை தான் வைத்து கொள்வதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்வதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சஜித் யாருடனும் தொடர்புப்படாமல் தனிமையில் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!