சிங்களவர்களின் விருப்பம் இல்லாமல் தமிழருக்கு அதிகாரம் அளிக்க முடியாது - கோட்டாபய அதிரடி அறிவிப்பு

256shares

பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார்.

தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்றிருந்த

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கு வைத்து “இந்து”பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அந்தச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு

“தமிழர்களுக்கு வளர்ச்சியையும், சிறந்த வாழ்க்கையையும் கொடுப்பது மிகவும் முக்கியமானது. சுதந்திரம் மற்றும் அரசியல் உரிமைகளைப் பொறுத்தவரை அரசியலமைப்பில் ஏற்கனவே விதிகள் உள்ளன. ஆனால் வேலைகள் மூலமாகவும், மீன்வளம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலமாகவும் அங்குள்ள மக்களுக்கு நேரடியாக பயனளிப்பதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பகிர்வுக்கான முந்தையை உந்துதல்கள் தமிழர் பகுதிகளின் நிலைமையை மாற்றவில்லை என்று குறிப்பிட்ட அவர், 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 13-வது திருத்தத்தின்படி தமிழர்களுக்கு வழங்க வேண்டிய அதிகாரப்பகிர்வு தொடர்பாக “பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக எங்களால் அதிகாரங்களை முழுமையாக பகிர்ந்தளிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

மேலும், “பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக எதுவும் செய்ய முடியாது என்றும் நான் நம்புகிறேன். பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர். தமிழர் பகுதிகளுக்கு வளர்ச்சிப் பணிகள் செய்யாதீர்கள் என்றும், வேலை வழங்காதீர்கள் என்றும் எந்த சிங்களவரும் சொல்லமாட்டார். ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு” என்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

gotabaya interview

(On the issue of rights for Tamil-majority areas, Mr. Gotabaya said he intends to focus on development of the region, not political issues as the previous push for “devolution, devolution, devolution” has not changed the situation there. Full devolution of powers as promised by the 13th Amendment to the Constitution in 1987 could not be implemented “against the wishes and feeling of the majority [Sinhala] community.” He added: “No Sinhala will say, don’t develop the area, or don’t give jobs, but political issues are different.”)


you may like this

இதையும் தவறாமல் படிங்க
loading...