அரசில் அமைச்சுப்பதவியை பெறுவதா? சுமந்திரனின் நிலைப்பாடு என்ன?

18shares

அரசுடன் இணைந்து அமைச்சுப்பதவியை றெப்போவதாக தான் எந்த ஒரு இடத்திலும் தெரிவிக்கவில்லையென தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

இன்றையதினம் கிளிநொச்சி பரந்தனில் முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

நான் சொல்லாத கருத்தை ஊடகங்கள் தவாறாக வெளியிட்டுள்ளன. நான் சொன்ன விடயம் என்னவென்றால் மத்திய அரசில் அமைச்சுப்பதவிகளை எடுக்காமல் இருப்பது எமது தமிழரசு கட்சியின் கொள்கை நிலைப்பாட்டின் காரணமாகவே ஆகும். அந்த கொள்கை நிலைப்பாடுதான் இன்றும் உள்ளது. அதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் அந்த கொள்கை நிலைப்பாட்டை நாம் மீள்பரிசீலனை செய்யவேண்டுமா என்பது வேறொருவிடயம்.எனவே தற்போது எழுந்துள்ள சூழ்நிலையில் மட்டுமல்ல போருக்கு பின்னரான கால கட்டத்தில் மாகாண சபையில் நாம் அதிகாரத்தை எடுத்து உபயோகத்திருக்கின்ற சூழலில் மத்திய அரசிலும் அவ்வாறான பொறுப்புக்களை எடுக்க முடியுமா? கூடாதா என நான் கூறியிருந்தேன். எனவே கட்சியின் கொள்கை தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்படத்தான் வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க