19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஹக்கீம் வெளியிட்ட தகவல்!

20shares

தற்போது நடைமுறையிலுள்ள 19 ஆவது திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் காணப்படுமாக இருந்தால் அது தொடர்பில் கலந்துரையாடத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நிறைவேற்று அதிகாரத்திற்கும் அரசியல் யாப்புக்கும் இடையில் ஒரு சமநிலை தன்மை பேணப்படுவது சிறந்தது என அந்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனக்கு பெரும்பான்மை கிடைத்தால் 19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வேன் என இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...